பிரித்தானியாவில் புதிய வாகன விதிகள் தொடர்பான எச்சரிக்கை.

பிரித்தானியாவில் புதிய வாகன விதிகள் இந்த மாதம் அமுலுக்கு வருவதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு அபராதங்கள் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். பிரித்தானியாவில் இளம் சாரதிகள் தங்கள் நண்பர்களுக்கு லிஃப்ட் கொடுக்க தடை விதிக்கப்பட உள்ளது. சாலைகள் துறை அமைச்சரான றிச்சேட் இந்த விதி தொடர்பான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவது குறித்து திட்டமிட்டுவருகிறார்.

அதாவது, இளைஞர்கள் கூட்டமாக வாகனத்தில் பயணிக்கும்போது, அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசிக்கொண்டுவரும்போது, விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க இந்த விதி கொண்டுவரப்பட உள்ளது.ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவர்களில் ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே இளம் சாரதிகள். ஆனால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், மற்றும் மோசமான விபத்துக்களை ஏற்படுத்தும் விபத்துக்களில் ஐந்தில் ஒன்று இந்த இளம் சாரதிகளால்தான் நிகழ்கிறது.மேலும்இ வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் முன்பு பொலிஸாருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பிரித்தானியாவின் 12 கவுன்சில்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

அதேபோல, அடுத்த மாதமும் சில விதிகள் அமுலுக்கு வர இருக்கின்றன.மொபைல் போன் பயன்படுத்தியவண்ணம் வாகனம் ஓட்டுபவர்கள், பாதையை மறைக்கும் வகையில் கார் கண்ணாடியில் மொபைல் வைக்கும் உபகரணங்களை பொருத்திவைத்திருப்போர், வழியிலேயே எரிபொருள் காலியாகி, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துவோர் முதலானோருக்கும் அபராதங்கள் விதிக்கப்பட உள்ளன.

மின்சாரத்தால் இயங்கும் கார்களின் பேட்டரிகளின் மின்சாரம் தீர்ந்து வழியிலேயே கார் நின்றாலும், தரமான டயர்கள் காரில் பொருத்தப்படவில்லையென்றாலும், அபராதங்கள் விதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.