மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் தயார்.

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தற்போதே தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான மே தின பேரணியை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய மக்கள் மே தினப் பேரணி இந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் மே பேரணி இம்முறை பி.ஆர்.சி. மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி விஹார மகாதேவி பூங்காவை அடைந்து அந்த பூங்காவிற்கு அருகில் மே தின பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த ஆண்டுக்கான மே தின பேரணியை கண்டி பொதுச்சந்தைக்கு முன்பாக நடத்த திட்டமிட்டுள்ளது.