இந்தியாவின் முதல் குளோன் செய்யப்பட்ட பசு.
இந்தியாவின் முதல் குளோன் செய்யப்பட்ட கிர் பசுவான கங்காவை ஜனாதிபதி திரௌபதி முர்மு பார்வையிட்டார்.ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியாவின் முதல் குளோனிங் பசுவான ‘கங்கா’வை ஜனாதிபதி திரௌபதி முர்மு பார்வையிட்டார். அவருடன் முதல்வர் மனோகர் லால் கட்டார் உடனிருந்தார்.
இதையடுத்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின்19வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.ஹரியானாவில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் மார்ச் 16 ஆம் தேதி 2023 அன்று பிறந்த இந்த பசுவை விஞ்ஞானிகள் குளோனிங் செயல்முறை மூலம் உருவாக்கியுள்ளனர்.
அதற்கு கங்கா என்று பெயரிடப்பட்டது. இந்த குளோன் செய்யப்பட்ட கன்று பிறக்கும் போது 32 கிலோ எடையுடன் இருந்தது.இத்தகைய கிர் இன மாடுகள் தரமான மற்றும் சுத்தமான பாலைக் கொடுக்கும். அந்த பாலின் தரம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கத்துடன், புதிய குணாதிசயங்களை அறிமுகப்படுத்தி குளோனிங் கன்று உருவாக்கப்பட்டுள்ளது. என்டிஆர்ஐ கடந்த 2009ம் ஆண்டு உலகின் முதல் குளோன் எருமையையும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.