புத்தாண்டுக்குப் பின்னர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகளைச் சந்திக்க  ஜனாதிபதி ரணில் தீர்மானம்.

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களை சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், 2025ஆம் ஆண்டுக்கான இலக்கு அபிவிருத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பையும் பெறுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட அரசியல் அதிகார சபை மற்றும் அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலாத் திட்டம் என்பன வெளியிடப்பட்டன.

04 வருடங்களுக்குள் நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முக்கிய சுற்றுலா நகரமான நுவரெலியாவின் பங்களிப்பை அதிகரிக்க முறையான திட்டமொன்றின் ஊடாக செயற்படுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.