இங்கிலாந்து ஸ்ரோக் ஒன் ரென்ட் இல் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றுள்ளது

இங்கிலாந்தின் ஸ்ரோக் ஒன் ரென்ட் பகுதியில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழ் பக்த அடியார்கள் மத்தியில் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் எழுந்தருளி  கும்பாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டாண்டுகளாக நடைபெற்ற கோவில் திருப்பணி நிறைவுபெற்று  3ம் திகதி திங்கட்கிழமை  திருவிழா நடைபெற்றது.

காலை எட்டு மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகின. விநாயகர் வழிபாடு நான்காம் கால யாக பூஜையைத் தொடர்ந்து, மங்கள இசை தீபாராதனை நடைபெற்றது.

வேல்ஸ் ஸ்ரீ கல்பக மஹா கணபதி ஆலய ஸ்தாபர், முத்தமிழ் வித்தகர்  சிவஸ்ரீ லம்போதர குமாரசாமிக் குருக்கள் தலைமையில் கும்பாவிசேகம் நடைபெற்றது. இன்னும் பல குருக்கள் இணைந்து நடத்திய வழிபாடுகளில் அடியார்கள் பயபக்தியோடு பங்கு கொண்டனர்.

அம்பாளின் ஆசியோடு பிரசாதம் கொடுக்கப்பட்டு அன்னதானமும்  பந்தல் அமைத்து வழங்கப்பட்டது. ஸ்ரோக் ஒன் ரென்ட் இலும் அப்பகுதியைச் சூழவுள்ள  அடியார்களுக்கும்  இந்தக் கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக  பக்தர்கள் தெரிவித்தனர்.