அவுஸ்திரேலியாவில் டிக்டொக்கிற்கு தடை.

அவுஸ்திரேலியாவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஆலோசனைக்கு பின்னர் பொதுநலவாய திணைக்களங்கள் மற்றும் முகவர் அமைப்புகளின் சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பின் கீழ் கட்டாய உத்தரவாக பிறப்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.இதனையடுத்து, இங்கிலாந்து அரசாங்க காரியாலய கைத்தொலைபேசிகளில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்தது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை செயற்படுத்தியது.