பிரித்தானியாவில் கடவுச்சீட்டை பெற 10 வாரங்கள் வரை செல்லும் என அறிவிப்பு.


பிரித்தானியாவில் கடவுச்சீட்டு விநியோக ஊழியர்கள், ஐந்து வார வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இரட்டை இலக்க பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஊதிய உயர்வு கோரி குறித்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு தயாராகும் வகையில் பிரித்தானியர்கள் தங்கள் பயண ஆவணங்களை புதுப்பிக்க முற்படுகையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுமார் 1000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில, கடவுச்சீட்டை பெற 10 வாரங்கள் வரை செல்லும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.