பிரித்தானிய வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் கரப்பந்தாட்ட வீரர்கள் ஒருங்கிணையும் VPL-UK போட்டி

பிரித்தானியா வாழ் தமிழர்களின்  கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும்  Volleyball Premier League – UK VPL  கரப்பந்தாட்டப் போட்டி  நடைபெறவுள்ளது.  பிரித்தானிய தமிழர் விளையாட்டு  வரலாற்றில் முதன் முறையாக நடைபெறவுள்ள VPL  போட்டிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் கரப்பாந்தாட்ட விளையாட்டு வீரர்களின் திறனை வெளிப்படுத்த பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து 12 அணிகள் களமிறங்கவுள்ளன. VPL அமைப்பின் நிறுவுனரும் இயக்குனருமான சிவகுமார் சுரேந்திரன்( சுரேன்),  ஊடக மற்றும் பொது  தொடர்பாளர் சுரேஸ், இணைப்பாளர் குட்டி,  ஆலோசகர் வதனன் மற்றும் நிர்வாக அங்கத்தவர் குகன் ஆகியோரின்  ஏற்பாட்டில்    ரப்பந்தாட்ட போட்டிக்கான  வீரர்களை ஏல முறையில் தெரிவு செய்தலுக்கான நிகழ்வு நேற்ற  புதன்கிழமையன்று  லண்டன் ஹரோ பல்மேறா உணவு உணவகத்தில்  பிற்பகல் 5 மணிக்கு  ஆம்பமானது.

VPL  கரப்பந்தாட்ட போட்டிக்காக  உருவாக்கப்பட்ட  12 பிரிமியர் லீக் அணிகளின் அறிமுகம் மற்றும் அந்தந்த அணிகளுக்கான உரிமையாளர்கள் , அணி முகாமையாளர்கள் ஆகியோர் அறிமுகம், பொதுத் தொடர்பாளர் சுரேஸ் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.  இதனைத் தொடர்ந்து VPL இயக்குனர் சுரேன் அவர்களினால்  விளையாட்டு  வீரர்களின் ஏலமுறைத் தேர்விற்கான விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்ட ன.

பிரித்தானியாவின் பல பாகங்களிலும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் 72 வீரர்கள் VPL  இல் போட்டியிடும் 12 அணிகளுக்காக ஏல முறை தெரிவு செய்தல் நிகழ்வு மிக விறுவிறுப்பாகவும் உற்சாகத்தோடும்  இடம்பெற்றது. 12 அணிகளுக்கும் தலா 1000 புள்ளிகள் வழங்கப்பட்டு, இப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்களை அந்தந்த உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் தெரிவுசெய்தனர்.  வீரர்களை ஏலமுறைத் தெரிவிடும் நிகழ்வு   நேரலையாக மெய்வெளி தொலைக்காட்சியில்  ஒளிபரப்பு செய்யப்பட்டது.  உலகின் பல பாகங்களிலும் இருந்து இந்த நிகழ்வை   ஆயிரக்கணக்கானவர்கள்  பார்வையிட்டமை VPL  கரப்பந்தாட்டப் போட்டி பற்றி பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் தோற்றுவித்துள்ளது.


பிரித்தானிய கரப்பந்தாட்ட வரலாற்றில் முதன்முறையாக நடைபெறவிருக்கும்   Volleyball Premier League [VPL  கரப்பந்தாட்ட போட்டி  ஏப்பிரல் 23ம் திகதி  Southall – Domers wells leisure centre என்னும் இடத்திலுள்ள இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தங்கள் திறமைகளை நிருபித்து வெற்றிக் கிணத்ததை தட்டிச் செல்வதற்காக ,  தமிழ்ப்பாலம், ஒஸ்கார்லீமா, கோல்டன் ஈகிள், யுகே தமிழ யுனைட்டட், யனைட்டட் றைடர்ஸ், மருதம், லண்டன் பயர், இசைத்தமிழ், ரோமியோ நொவெம்பர், வொலிபோல் கிங்ஸ், தாய்மண் மற்று ம்  ; இணைந்த கரங்கள் என்னு ம்  ; 12 அணிகள் போட்டியிடவுள்ளன. 5000 பவுண்ஸ் பணப்பரிசோடு வெற்றிக்கிண்ணத்தை தட்டிச் செல்லப்போகும் அணி யார் என்ற பரபரப்பு ரசிகர்களிடம் ஏற்படத்தொடங்கியுள்ளது.  ஏப்பில் 23ம் திகதி நடைபெறவிருக்கும் இந்த போட்டிகள் அனைத்தும் மெய்வெளி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப்படவுள்ளன என்பதும் உலககெங்கிலும் இருந்து  அனைவரும் VPL போட்டியை கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.