நீதித்துறையின்  அரசின் குறைமதிப்பிற்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட்டறிக்கை.


நீதித்துறையின் கண்ணியம் மற்றும் அதன் முன்வருகையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டனர்.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் வரலாறு காணாத நெருக்கடியை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளதோடு, இத்தகைய சூழ்நிலைக்கு எதிரான ஒரு ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பமாக இந்த கையொப்பமிடுதல் நிகழ்வு இடம் பெற்றது.