சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுமதித்துள்ளது.
3 பில்லியன் டொலர் கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திடம் குறித்த தொகையை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு ஐ.எம்.எப். உள்ளிட்ட உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியையும் இலங்கை பெறவுள்ளது