12வது நாளாக தொடரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை 12வது நாளாக தொடர்கிற நிலையினுள் பல்கலை கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி மின்சாரம் மற்றும் நீர் விநியோக தொழிற்சங்கங்களின் போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைகள் தொடர்பாக இந்த வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாட உள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.