அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்-தேசிய போக்குவரத்து ஆணைக்குழு.

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளுக்கும் வழக்கமான பேருந்துகளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்ததால் சம்பந்தப்பட்ட பேருந்து சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.