பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.

காஷ்மீரின் பல இடங்களில், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில், காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பிட்ட இன மக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை
நடைபெறுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தோரின் சைபர் தாக்குதல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.