இங்க பெத்துப்போட்டு ரத்தம் காயமுதல் குழந்தையளை ரோட்டில எறிஞ்சிட்டு போகுதுகள்…மனுசரே இதுகள்!

அது சரிஅண்டைக்கொருக்கா பலார்பத்தி விடியக்கே எனக்கும் வைத்த கலக்குது பாத்ரூமுக்கு போவமெண்டு ஓடிப் போனா கதவு பூட்டிக் கிடக்குது….எனக்கும் வைத்த கலக்குது என்னடா எண்டு பார்த்தா உள்ளுக்கு நின்று புக வருகுது..எனக்கு பயம் வந்துவிட்டது ஏன் என்டால் மனுசியும் சுருட்டு பீடியள் ஒண்டும் குடிக்கிறேல்ல…மனுசியும் வீட்டுக்குள்ள படுத்துக்கிடக்குது பேய் கீயோ …..சரி ஆரெண்டு கேட்டன் மனுசீன்ர குரல் வந்தது அது நானென்டு…..

அப்ப இன்னும் எனக்கு பயம் வந்திட்டுது வயிறும் ஒரு பக்கம் கலக்குது திரும்ப வீட்டுக்கு போய் பார்த்தன் மனுசி படுத்து குறட்டை விட்டு நித்திரை… அதைப் பார்க்க எனக்கு என்னும் பயம் வந்திட்டுது .திரும்பி வந்து பார்த்தா பாத்ரூம் திறந்து கிடக்குது… புக வருகுது ஆளக்காணேல்ல பின் வேலிப் பக்கமா படக்கண்டு சத்தம் கேட்டுது..பார்த்தா என்ரை பேரன் முயல் வெடிச்சு போட்டு போன மாதிரி ஒரே ஓட்டம் …என்ன நடந்தது தெரியுமே! அவன்தான் களவா பீடி குடிச்சுக்கொண்டு நிண்டவன்.. மனுசீன்ர குரல்ல கதைச்சு என்ன பேக்காட்டி போட்டான்.

உப்படி சில வேளை என்ரை குரல்லையும் ஆரும் கிழவிகளுக்கு லவ் சொல்லுவான் அதுகள் என்னோட சண்டைக்கு வருங்கள்..சரி.. சரி ..அது ஒரு புறம் இருக்க இப்ப கிட்டடில புதுக்குடியிருப்புக்கு  ஒருஅலுவலாப் போனன்…. போனா அங்கு ஒரு பசுமாடு றோட்டு றோட்டா கண்ணீர் விட்டு அழுதுகொண்டு மூன்று நாலு நாளா திரிஞ்சதெண்டு அறிஞ்சன் நானும் நேர கண்டன்..ஏனென்டால் அதின்ர கன்று குட்டிய காணேல்ல எண்டுதான் பசு அழுது கொண்டு திரிஞ்சுது… பாத்தியளே!

ஐஞ்சு அறிவு மிருகத்தின் புத்தியை ….ஆனா இப்போது கிழமைக்கு முதல் ஒரு பொம்பள தான் பெற்ற குழந்தைய அதின்ர ஈரம் காய முதல் றோட்டில போட்டுட்டு ஓடின அலுவல் ஒன்று திருகோண மலையில நடந்தது …பார்த்தியளே! அலுவல ஐஞ்சு அறிவு படைத்த மிருகம் தன்ர கண்டைக் காணேல்ல என்டு மூன்று நாலு நாளா அழுது கொண்டு திதியுது… இஞ்சால ஆறறிவு உள்ள பொம்பள தான் பெத்த பிள்ளையை றோட்டில எறிஞ்சு போட்டு ஓடுறாள்.வர வர மனுசன்ர  அறிவு குறைந்து கொண்டு போகுது மிருகத்தின் அறிவு கூடிக் கொண்டு போகுது …இப்ப எத மிருகமெண்டு எத மனுஷர் என்டு சொல்லுறது எண்டு எனக்குத் தெரியாமல் கிடக்குது.. தெரியாத உறவில புரியாமல் பிள்ளைய பெத்து அறியாத பாலன தெருவில போடுறது என்ன நியாயம்.. அப்ப நான் போட்டு அடுத்த வாரம்           வாறன் பாய்….பாய்…..