ராகம – வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய தாய்.
ராகம பிரதேசத்தில் வளர்ப்பு மகளை உடல்ரீதியாக சித்திரவதை செய்த பெண்ணொருவர் மார்ச் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராகம – குருகுலேவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து 39 வயதுடைய குறித்த பெண், 17 வயதுடைய வளர்ப்பு மகளை தாக்கியுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் உயிரிழந்ததையடுத்து தந்தை மறுமணம் செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தாக்கியதாக கூறப்படும் பெண்ணுக்கு 09 வயதில் ஒரு பெண் பிள்ளை இருப்பதாகவும், தந்தை வெளிநாட்டில் தொழில்புரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.