இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம்: சாடினார் சி.வி விக்னேஸ்வரன்

இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம்  என  தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாது என வலியுறுது;திய இவர் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமாஞ்ஞ பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டாகக்  கையளித்த கடிதத்தை மேற்கோள்காட்டி, அவற்றுக்கு விளக்கமளித்து இந்நான்கு மகாநாயக்க தேரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

 

அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தத விடயங்கள் சிங்கள சமூகத்தின் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், எனவே மகாசங்கத்தினரை விமர்சிப்பது ஏற்புடையதா? என்றும் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்றுமு;,  வட, கிழக்குவாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்டார்.