மார்ச் 20 பரிசீலனை: IMF அறிவிப்பு

பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை நிதி உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிதியளிப்பதற்காக 2022 செப்டம்பர் 1 ஆம் திகதியன்று எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்தத்தின் ஒப்புதலை மார்ச் 20 அன்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வாரியம் பரிசீலிக்க இது வழி வகுக்கிறது.