இலங்கைக்கு ஆதரவை வழங்குவது தொடர்பான ஜோஜிவாவின் பதிவு.

இலங்கைக்கு ஆதரவை வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜிவா தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதில் மற்றும் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு இலங்கை அதிகாரிகள் தங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.