தேர்தலை நடத்தாவிட்டால் வடக்கு, கிழக்கின் பலத்தைக் காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தயார்: சாணக்கியன் தெரிவிப்பு.

214

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் கூறிக் கொள்வது ஒன்று தான்இ உடனடியாக தேர்தலை நடாத்துங்கள். பொய்யான சாக்குப்போக்கு காரணங்களை காட்டி எம்மை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

தேர்தலை நடத்தாவிட்டால் வடக்கு, கிழக்கின் பலத்தைக் காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தயாராகவுள்ளது. யாரோ ஒரு அமைச்சர் கூறுகிறார் ஐஎம் எவ் தேவையில்லை, சீன நாட்டில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வரவுள்ளனர், அதில் டொலர்கள் கிடைக்கின்றதாம் என்ற எனக் குறிப்பிட்டு இதையே கோட்டாபய ராஜபக்ஷவும்  கூறினார் எனத் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைவரிடம் ஆலோசனைகளை கேட்டு அவரை சூழ இருந்தவர்கள் கூறியதெல்லாவற்றையும் நம்பி அவற்றை முழுங்கி இறுதியாக விரட்டி அடிக்கப்பட்டமை ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஞாபகத்தில் இருக்கட்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.