காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்றி மரணச்சான்றிதழ் வழங்கும் அரசின் நடவடிக்கை தொடர்பாக எச்சரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்றி மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளதாகவும் ஓ.எம்.பியால் முடியாததை பிரதேச செயலகங்கள் ஊடாக செயற்படுத்துவதே அரசின் திட்டம்  எனவும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

கடந்த 13,14 வருடம் தாங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்  ஓ எம் பி என்கின்ற அலுவலகம் பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள் என்றும், குறித்த இந்த  ஓ எம் பி அலுவலகத்தில் பதிவினை மேற்கொள்வதற்கு தமக்கு நம்பிக்கை இல்லை என்பதனால் ஓ எம் பி அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்கு போகவில்லை என்றம் குறிபபிட்டார். ஆகையால் ஓ எம்பி அலுவலகத்தில்  பதிவினை மேற்கொள்வதற்கு உறவுகள் வருகை தரவில்லை என்பதால், தற்பொழுது இரண்டு நாட்களாக  கிராம சேவையாளர் ஊடாக அறிவித்து பிரதேச சபையில், நாளை பதிவினை மேற்கொள்வதாக கூறி உள்ளார்கள்.

அதிலும், குறிப்பாக நீதி அமைச்சின் கீழ் பதிவு செய்வதாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் தமது உறவுகளுக்கு நீதி அமைச்சின் கீழ் பதிவு செய்வது என்பது விளக்கம் இன்மை காரணமாக குழப்பமடைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார். ஆகவே  நீதி அமைச்சின் கீழும்  ஓ எம் பி  அலுவலகம்  தான் பதிவுகளை  மேற்கொள்கின்றது .மரண சான்றிதழ் களுக்கான ஆவணங்களை தான் கேட்டிருக்கின்றார்கள், எந்த இடத்தில் காணாமல்போனது  என்கின்ற விடயம் தொடர்பில் சத்தியக்கடதாசி பூர்த்தி செய்து கொண்டுவர கூறியிருக்கின்றார்கள்.

அது மரண சான்றிதழ் களுக்கான ஆவணங்கள் என்பதனை  உறவுகளுக்கு தெரியப்படுத்துகின்றோம் என அவா தெரிவித்தார். ஓ எம் பி என்கின்ற அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்கு வருகை தராத உறவுகளுக்கான பதிவாக இந்த பதிவு காணப்படுகின்றது. இதனை காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தெரியப்படுத்த்துகின்றோம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.