வரிக்கு எதிராக நாளை பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்.
அரசின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (01) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
எனினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார். அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் கறுப்புப் பட்டி அல்லது கறுப்பு ஆடை அணிந்து பாடசாலைக்குச் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள வங்கிச் சேவைகள் நாளைய தினம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஷன்ன திஸாநாயக்க கூறினார்.
அத்துடன் இலங்கை மின்சார சபை (CEB), தபால் சேவைகள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அனைத்து தொழிற்சங்கங்களும் வரி வசூலிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.