தேர்தல் தாமதத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்களில் இருந்து தேர்தல் தாமதத்துக்கு அவரே பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பொய் சொல்வதில் மூன்று வகைகள் இருக்கின்றன. முதலாவது பொய், இரண்டாவது புள்ளிவிபரங்களுடன் பொய், மூன்றாவது அப்பட்டமான பொய். இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று நாடாளுமன்றில் கூறியது, அப்பட்டமான பொய் எனத் தெரிவித்தார்.
இதுவரை காலமும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதிப்பதற்கான குற்றச்சாட்டு, திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சகர் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், இன்று ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறிய கருத்துக்களில் இருந்து ஜனாதிபதியே இதற்குப் பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலை பிற்போடுவது தமது எண்ணம் இல்லையெனவும்இ நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்