நீதிமன்ற கட்டளையை புறந்தள்ளி முற்றுப்பெற்ற குருந்தூர்மலை பௌத்த விகாரையின் கட்டுமானம்.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு அமைந்துள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரையின் கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. குருந்தூர் மலையில், முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப்பணிகளை நிறுத்துமாறு கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருந்த போதிலும் நீதிமன்றத்தின் கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டுமானம் நிறைவுப் பெற்றுள்ளது.
இந்நிலையில், குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவநேசன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.