தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான நிதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுவிக்காதிருக்க எடுத்த தீரமானத்திற்கு எதிராகவே இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.