ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் !

மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

போராட்டம் காரணமாக புறக்கோட்டை, ஓல்கெட் மாவத்தை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.