முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்: தமிழ் தரப்பினருக்கு ரணில் ஆலோசனை.

சமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை கூறியுள்ளார் .

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்ற கருத்தை மீண்டும் முன்வைத்திருந்தார். தமிழ்த் தரப்புக்கள் அதனை நிராகரித்திருந்தன. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொழும்பு ஊடகம் என்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்று கூறிய  அந்த நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருப்பதாகவும், இந்தநிலையில் சொல்லாடல்களை வைத்து கருத்து மோதல்கள் வேண்டாம். கிடைக்கின்ற அதிகாரங்களை முதலில் பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார். இதைவிடுத்து சமஷ்டி என்று முட்டி மோதுவதால் அது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இன ரீதியில் விரிசல்களை மேலும் அதிகரிக்கவே செய்யும். இதை சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் கவனத்தில் கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.