சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் மனைவியை குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர்.
இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இதில் பலரும் பார்த்திருக்க தனது மனைவியை கணவன் குத்திக் கொன்றார்.
சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ், கான்டன் ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள ‘பெர்னர்ஸ் எஸ்வெர்க்’ என்ற சிற்றுண்டிச்சாலையில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தக் கொலை நிகழ்ந்தது. அந்நாட்டுக் காவல்துறையினரின் தகவலின் படி, கொலையுண்டவர் 47 வயது பெண் ஆவார். இவரை 57 வயதான அவரின் கணவர் கத்தியால் குத்திக் கொன்றார். தகவலறிந்து காவல்துறையினரின் அங்கு சென்ற போது பாதிக்கப்பட்டவர் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். அவரை காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.