நியூசிலாந்தில் கேப்ரியல் சூறாவளி வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியதால் அந்நாடு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் கேப்ரியல் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் தேசிய அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வரலாற்றில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இது குறித்து அவசரநிலை மேலாண்மை அமைச்சர் கீரன் மெக்அனுல்டி கூறும்போது, இது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏற்பட்ட வானிலை நிகழ்வாகும், இது வடக்கு தீவின் பெரும்பகுதி முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த புயலினால் மோசமான நிலையினை அடைந்துள்ளது. இன்றும் பலத்த காற்றும் மழையும் பெய்யக்கூடும், தேசிய அவசர நிலை நன்மை பயக்கும் என்று நான் கருதுகிறேன், என்று அவர் மேலும் கூறினார்.
இதனால் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியும், அரசு ஏற்கனவே சில நாட்களாக புயல் பாதித்த இடங்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருகிறது என்று அவர் கூறினார்.