தேவையின்றி மக்களை குழப்ப வேண்டாம்: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவிப்பு.

எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக களத்தில் நின்று சண்டை செய்தவர் பிரபாகரன். தேவையின்றி மக்களை குழப்ப வேண்டாம் என சீமான் கருத்து வெளியிட்டுள்ளார்.

பழநெடுமாறன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வெளியட்ட தகவலை அடுத்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி தவறாமல் மேடைக்கு மேடை புகழ்ந்து பேசும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று ஈரோட்டில் இந்த தகவல் குறித்து தனது கருத்தினை பதிவிட்டார்.

தன் மகன் பாலச்சந்திரனை சாக கொடுத்துவிட்டு,  பிரபாகரன் பத்திரமாக தப்பி சென்று இருப்பார் என்று நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையும் நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக களத்தில் நின்று சண்டை செய்தவர் பிரபாகரன் என குறிப்பிட்டார்.மேலும், தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பித்துச் செல்லும் கோழை அவர் அல்ல எனவும்,  போர் முடிந்து 13 ஆண்டுகளாக பிரபாகர் பதுங்கி இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அவர் சொல்லிவிட்டு வர மாட்டார்.

வந்துவிட்டு தான் சொல்வார். அதனால் தேவையின்றி மக்களை குழப்ப வேண்டாம் ஒருவேளை அவர் மக்கள் முன் தோன்றினால் அப்போது பேசுவோம். என தனது கருத்தினை பதிவிட்டார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.