கற்பிட்டியில் கரையொதுங்கிய திமிங்கலங்கள் !

புத்தளம் கற்பிட்டியில் கரையொதிங்கிய 14 பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்றும் பாரிய மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.  நேற்று (சனிக்கிழமை) அதிகாலை பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் மூன்று திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எஞ்சிய 11 திமிங்கலங்களை மீட்பதற்கான முயற்சிகள் இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.