சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள்-நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார்.

சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் வருகின்ற மாசி மாதம் 04 ஆம் திகதி மட்டக்களப்பில் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை தமிழரசு கட்சி, போராட்டத்தை நடத்தும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.