மக்களை ஏமாற்றிய அரசாக திமுக அரசு உள்ளதால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்-ஜி.கே.வாசன்

மக்களை ஏமாற்றிய அரசாக திமுக அரசு உள்ளதால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என ஜி.கே.வாசன் பேட்டி.

வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில்  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும், அதிமுக போட்டியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், சேலத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துளளார். அப்போது பேசிய அவர், பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து திமுகவிற்கு பாடம் கற்று தர வேண்டும்; மக்கள் நினைக்கும் மாற்றம் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் உறுதியாக ஏற்படும்.

நாளுக்கு நாள் திமுகவிற்கு எதிராக ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளார்கள்; மக்களை ஏமாற்றிய அரசாக திமுக அரசு உள்ளதால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்; இதனை வருகின்ற தேர்தலில் மக்கள் எதிரொலிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.