தாமரை மொட்டுச் சின்னத்தில் பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களை நிச்சயம் கைப்பற்றுவோம்: பஷில் ராஜபக்ச சவால்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றிணைந்தவர்கள் தனித்து சென்றுள்ளமை சவால் மிக்கதாகும். சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டும். ஒன்றிணைவதும் விலகிச் செல்வதும் இயல்பானது. தாமரை மொட்டுச் சின்னத்தில் 252  உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவோம். பெரும்பாலான  உள்ளூராட்சிமன்றங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். தலதா மாளிகையில் நேற்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அதனைக் குறிப்பிட்டார்.

இடம்பெறவுள்ள  உள்ளூராட்சின்றத் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளோம், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தில் போட்டியிட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.ஒருசில மாவட்டங்களில் கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 252  உள்ளூராட்சிமன்றங்களில் தாமரை மொட்சி சின்னத்தில் போட்டியிடும். வடக்கு மாகாணத்தில் வீணை சின்னத்தில் போட்டிவோம். கிழக்கு மாகாணத்தில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவோம்.பெரும்பாலான  உள்ளூராட்சிமன்றங்களில் பொதுஜன பெரமுனவின் தனித்துவம் உறுதிப்படுத்தப்படும்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற  உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றது. இம்முறை இடம்பெறவுள்ள  உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப்பெறுவோம். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு இல்லை. வெற்றி,தோல்வி ஆகியற்றை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.