மூடப்படும் மெற்றோ ரயில் நிலையங்கள் விவரம் அறிவிப்பு.

Kumarathasan Karthigesu

ரிப்பப்ளிக் சதுக்கத்தில் பாரிஸ் பேரணி ஆரம்பம்.

ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக நடைபெறுகின்ற பெரும் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாரிஸ் நகர மெற்றோ ரயில் சேவைகள் நாளை வியாழக்கிழமை பெருமளவில் ஸ்தம்பிக்கவுள்ளன.

காலையும் மாலையும் பெருமளவில் பயணிகள் கூடுகின்ற நேரங்களில் மட்டுமே ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. அவ்வாறு சேவை நடைபெறுகின்ற வழித் தடங்களிலும் நிலத்தடி ரயில் நிலையங்கள் பல மூடப்பட்டிருக்கும்.

பாரிஸில் பிரதான மக்கள் பேரணி ரிப்பப்ளிக் சதுக்கம் (Place de la République) பகுதியில் இருந்து தொடங்கவுள்ளதால் அந்தப் பிரதேசத்தை அண்டிய மெற்றோ நிலையங்கள் பலவும் கூட மூடப்படுகின்றன.

மூடப்படவுள்ள நிலையங்கள் விவரம் வருமாறு :

?வழித்தடம் 1-Reuilly-Diderot, Bastille, Hôtel de Ville et Champs-Élysées Clémenceau

?வழித்தடம் 2 (LIGNE 2) Barbès-Rochechouart – Porte Dauphine நிலையங்கள் இடையே உள்ள சகல            ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்.

?வழித்தடம் 3 -(LIGNE 3) Wagram -Gallieni இடையே உள்ள சகல நிலையங்களும்                 மூடப்பட்டிருக்கும்.   

?வழித்தடம் 3Bis – (LIGNE 3 BIS) முற்றுமுழுதாக மூடப்படும்.

?வழித்தடம் 4-Alésia, Raspail, Montparnasse-Bienvenüe, Odéon, Cité, Réaumur-Sébastopol, Gare de l’Est,     Barbès-Rochechouart, Simplon and Strasbourg Saint-Denis.

?வழித்தடம் – 5(LIGNE 5)Gare de l’Est மற்றும் Place d’Italie இடையே சகல நிலையங்களும் மூடி     இருக்கும்.

?வழித்தடம் 6-Place d’Italie

?வழித்தடம் 7-(LIGNE 7) Jussieu, Opéra, Cadet, Gare de l’Est, Tolbiac et Place d’Italie

?வழித்தடம் 7Bis – (LIGNE 7 BIS) Place des fêtes.

?வழித்தடம் 9 – (LIGNE 9) République, Grands Boulevards, Richelieu-Drouot, Miromesnil, Trocadéro, Michel-   Ange Auteuil, Michel-Ange Molitor, Strasbourg Saint-Denis et Oberkampf.

?வழித்தடம் 12 (LIGNE 12) Pigalle, Pasteur, Sèvres Babylone et Montparnasse-Bienvenüe

?வழித்தடம் 13 (LIGNE 13) – Place de Clichy வழித் தடங்கள் 8,10,11 ஆகியவற்றில் சேவைகள் முற்று முழுதாக நிறத்தப்படுகின்றமை தெரிந்ததே.