யாழ். பல்கலையில் மலையக தியாகிகள் தினம்!

ஆர்.சனத்

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல், யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில்  நேற்று நடைபெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக மாணவர் ஒன்றியத்தினர், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு, தியாகிகளை நினைவுகூர்ந்தனர்.