பிரேசில்-நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள்.
பிரேசில் நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போல்சனேரோவின் இன்று பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதேபோல், ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போல்சனேரோ ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு, ஜனாதிபதி மாளிகை முன் திரண்டதால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.