தமிழ் கட்சிகளை இணைத்து பலமான கூட்டணியாக களமிறங்குவோம் என ரெலோ அறிவிப்பு.

இலங்கை தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், ஏனைய தமிழ் கட்சிகளை இணைத்து பலமான கூட்டணியாக களமிறங்குவோம் என ரெலோ அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கூட்டமைப்பில் உள்ள மற்றைய கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென கூறுவதற்கு தமிழரசு கட்சிக்கு எந்த அருகதையுமில்லை என்றும் தெரிவித்துள்ளது.எதிர்வரும் உள்ளோராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தம் கருணாகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்

.தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளையும் ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒரு பலமான கூட்டணியை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார். எமது உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து பலமான ஒரு கூட்டணியை உருவாக்குவோம் என்றும் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளது.