பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம். தாயாருக்கு கண்கலங்க பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தனது 100 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் தனது தயார் இறந்தது  குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள  பிரதமர் மோடி,

“ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்துள்ளது .என் அம்மாவிடம் , ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் சின்னம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உணர்ந்தேன்”

“அவரது 100 வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, ​​அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார், இது எப்போதும் நினைவில் உள்ளது, இது புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள்,” என்று பிரதமர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதேவேளை குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனத்தில் தனது தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்று ஏற்றி தானும் அதில் அமர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.