தமிழ் நாட்டில் உள்ள நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில்: அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,’பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஏற்கனவே  நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக கடிதம் எழுதி இருந்தேன்.

எங்களது தொடர் முயற்சியின் விளைவாக மக்களவையில் இதற்கான மசோதா குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்  என பதிவிட்டுள்ளார்.