பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க மின்சார காலனியை கண்டுபிடித்த 10-ஆம் வகுப்பு மாணவி.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலக்ஷ்மி பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க மின்சார காலணி கண்டுபிடித்துள்ளார். பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி ஆகும்.

பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றால் அதனை தடுக்க காலால் எட்டி உதைக்க அந்த நபர் மீது மின்சாரம் பாயும் மற்றும் இதில் ஜிபிஎஸ் பொறருத்தப்பட்டிருப்பதால் லைவ் லொகேஷன் கணிக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.