உதயநிதி அமைச்சராக பதவியேற்பு விழா: இபிஎஸ்க்கு அழைப்பு

உதயநிதி அமைச்சராகவுள்ள நிலையில் இன்று  நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, உதயநிதி அமைச்சராவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.மேலும் அவர் அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் என தெரிவித்தார்.