முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் கைது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து 12 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  பிரதி உபவேந்தர் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

சிசிரிவி கமெராவின் உதவியுடன் குறித்த 12 மாணவர்களும் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின் காட்சிகள் மற்றும் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முடிவடையும் வரை அவர்களை இடைநீக்கம் செய்வதற்கான முடிவு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.