பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிக்கு மாணவர்கள்.

 

ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் சித்திரவதைக்குள்ளான மூன்று மாணவ பிக்குகள் ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அபய என்ற சித்திரவதை அறையில் வைத்து கொடூரமான தாக்குதல் நடத்தி ஆடைகளை  களைந்து பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் குறித்தும் முறைப்பாடு செய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் இரண்டு இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், அவர்களில் இந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் உள்ளதாகவும் அவர்கள் பொலிஸாரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.