கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் அதிகரிப்பு.
கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையும் இதற்கு காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் வளி மாசுபாடு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.