தமிழக பா.ஜ.க தலைவர் குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாக பரவிய செய்திகள் போலியானவை.
தமிழக பா.ஜ.க.வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி ஒரு தகவல் வெளியானது அதில் பாஜகவில் குறிப்பிட்ட சமூகத்தினர் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்த தவறும் செய்யாத ராகவனைப் போலவே என்னையும் திட்டமிட்டு வெளியேற்றியுள்ளனர்.
தேச பக்தி கொண்ட அவர்களால் மட்டும் தான் பாஜகவிற்கு வாக்களிக்கவும் – உழைக்கவும் முடியும்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இது உண்மையில்லை காயத்ரி ரகுராம் இவ்வாறு பேசி இருக்கிறாரா என்ற உண்மை தன்மையை ஆராய அவர் அளித்த பேட்டி, டுவிட்டர் பதிவுகளை ஆராய்ந்தபோது இதுபோன்ற கருத்தை அவர் தெரிவிக்கவில்லை என்பது தெளிவானது. இந்த நிலையில் காய்த்ரி ரகுராமே, “இது தவறான பதிவு. இதை நான் கண்டிக்கிறேன்.” என பதிவிட்டு விளக்கி உள்ளார்.