இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்துசிவலிங்கம் காலமானார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தொழிற்சங்க வாதியுமான முத்துசிவலிங்கம் காலமானார்.
79 வயதான அவர் கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று (23) காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அவரது இறுதி நிகழ்வுகள் பற்றியத் தகவல்கள் பின்பு அறிவிக்கப்படும்.