அவதார்-2 படத்தின் புதிய டிரைலர் வெளியானது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.
படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
காடுகளை தொடர்ந்து தண்ணீரை பற்றிய படமாக இந்த படம் உருவாகியுள்ளது . சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் தற்போது ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.