இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் ‘வாழை’
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘வாழை’ என பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜின் 4-வது திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு ‘வாழை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தை அவரும் அவருடைய மனைவியும்சேர்ந்து ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். படத்திற்கான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.