ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது.

முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் சிறையில் இருந்து அண்மையில் வெளியான நளினி, திருச்சி முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை இன்று சந்தித்து விட்டு வந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். உண்மையில் ராஜீவ் காந்தி இறந்த போது எங்கள் வீட்டில் யாரும் சாப்பிடக்கூட இல்லை. ‘ என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘ சாந்தன் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். அதே போல எனது கணவர் முருகன் தனது மகள் வசிக்கும் லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். ‘ என செய்தியாளர்களிடம் நளினி குறிப்பிட்டார்.