தகாத உறவு -24 வயதான இளைஞர் அடித்துக் கொலை.

தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த 24 வயதான இளைஞர் ஒருவர், பெண்ணின் கணவனால் தாக்கப்பட்டு, மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிந்துள்ளார்.

இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (12) இரவு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு இரத்தினபுரி பொலிஸார் விரைந்துள்ளனர்.

காயமடைந்த நபரை மீட்டு, இரத்தினபுரி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மனைவிக்கும் இளைஞனொருவருக்கும் தகாத உறவில் ஈடுபடுவதை அறிந்த கணவன், வீட்டுக்குச் சென்றபோது மனைவியுடன் இளைஞர் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.

இதனையடுத்து, பெண்ணின் கணவர், அவரைத் தாக்கி வீட்டுக்கு வெளியே மரத்தில் கட்டிவைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், கொலைச் சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">